அரசியல் கட்சிகளில் ஒற்றைத் தலைமையில் கீழ் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும்-திருநாவுக்கரசர்
அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.மேலும் மூத்த தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஒற்றைத்தலைமை குறித்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளில் ஒற்றைத் தலைமையில் கீழ் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும். பல தலைமைகள் இருந்தால் கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.