எய்ம்ஸ் அமைய உள்ள 224 ஏக்கர் நிலத்தை சுற்றி ரூ.15 கோடியில் தடுப்பு சுவர் அமைக்க ஒப்பந்தம்

கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினர்.அடிக்கல் நட்டு ஆறு மாதம் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்க்கான எந்த வேலையும் நடைபெற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதில்,மருத்துவமனை கட்ட மாநில அரசானது எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அதனால் தாமதமாகிறது என்ற தகவலை மத்திய அரசு கூறியது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு நேரில் ஆய்வு செய்தது . சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய நிதிக்குழுவும் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தது.
மதுரையில் நேரில் ஆய்வு செய்த பின் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரக துணை இயக்குநர் சபிதா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள 224 ஏக்கர் நிலத்தை சுற்றி ரூ.15 கோடியில் தடுப்பு சுவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . தடுப்பு சுவர் கட்டும் பணி சில நாட்களில் தொடங்கி 3 மாதத்தில் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025