முன்னாள் முதல்வர் மறைவு ! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -புதுச்சேரி அரசு அறிவிப்பு
ஜானகிராமன் மறைவையொட்டி புதுச்சேரியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவையொட்டி புதுச்சேரியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். ஜானகிராமன் உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.