டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ! முதலில் களமிறங்கும் தென் ஆப்ரிக்கா
இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோத உள்ளது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள்:ஹாசிம் அம்லா, குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஃபாஃப் டூ பிளெசிஸ் (கேப்டன்), ரேசி வான் டெர் டஸன், டேவிட் மில்லர், ஜீன்-பால் டுமினி, ஆண்டில் பெஹில்குவே, கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, இம்ரான் தாஹிர், தாபிரீஜ் ஷாம்ஸி ஆகியோர் இடம் பெற்றனர்.