கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு :6 பேர் குற்றவாளிகள்- பதான் கோட் நீதிமன்றம் தீர்ப்பு
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் கோயிலில் வைத்து 8 வயது சிறுமி கொடூரமாக பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை பஞ்சாப்பில் உள்ள பதான் கோட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று பதான் கோட் நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான் கோட் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சஞ்சி ராம், அவரின் மகன் விஷால்,சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தீபக் , சுரேந்தர் வர்மா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது பதான் கோட் நீதிமன்றம்.