விஸ்வரூபம் எடுக்கும் ஒற்றை தலைமை விவகாரம் !கட்சி நிர்வாகிகளுடன் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திடீர் ஆலோசனை

Default Image

எம்எல்ஏ ராஜன் செல்லப்பா,  கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை செய்து வருகிறார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.இதனால்  ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார்.

பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும்,இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வருகின்றனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது.மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது.மேலும் இடைத்தேர்தலில் 9 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது.இதனால் அதிமுக தனது வாக்கு வங்கியை நாளுக்கு நாள் இழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை .ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.

இந்நிலையில்  அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என கூறிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை செய்து வருகிறார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜூன் 12-ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்