உலககோப்பையில் இரு அணிகள் சேர்ந்து அடித்த அதிகபட்ச ரன்கள் பட்டியல் வெளியானது
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியும் ,ஆஸ்திரேலியா அணியும் மோதியது.போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த உலககோப்பைகளில் ஒரு போட்டியில் இரு அணிகள் அடித்த அதிக ரன்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியும், இலங்கை அணியும் மோதியது.
இப்போட்டியில் இந்த இரு அணிகள் அடித்த மொத்த ரன்கள் 688 ஆகும். இந்த ரன்கள் தான் இதுவரை உலக்கோப்பையில் ஒரு போட்டியில் இரு அணிகள் அடித்த அதிகபட்ச ரன்களாக உள்ளது.
அதன் பிறகு நடப்பு உலக்கோப்பையில் ஜூன் 03 தேதி நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அடித்த 682 ரன்களும் ,நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா Vs ஆஸ்திரேலியா அடித்த 668 ரன்களும் இடம் பிடித்து உள்ளது. மேலும் முதல் முறையாக ஒரே உலககோப்பையில் இருந்து இரண்டு அதிகபட்ச ரன்கள் பதிவாகி உள்ளது.
688 Aus (376) v SL (312) Sydney 2015
682 Pak (348) v Eng (334) Nottingham 2019
676 Ind (338) v Eng (338) Bengaluru 2011
671 Aus (377) v SA (294) Basseterre 2007
668 Ind (352) v Aus (316) Oval 2019