மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முதல்வர் தான் தமிழகத்தில் உள்ளார்- கனிமொழி
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முதல்வர் தான் தமிழகத்தில் உள்ளார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது.அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சியில் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவது சரியல்ல.
மின்வாரியம் மட்டுமல்ல,அனைத்து அரசு பணிகளிலும் தமிழர்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை .மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முதல்வர் தான் தமிழகத்தில் உள்ளார்.அதிமுகவில் உள்ள பிரச்னைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.