திமுக சார்பில் பள்ளி நடத்தப்பட்டால் நிச்சயமாக இருமொழிக்கொள்கை தான்-கனிமொழி
திமுக சார்பில் பள்ளி நடத்தப்பட்டால் நிச்சயமாக இருமொழிக்கொள்கை ஆகத்தான் இருக்கும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி கூறுகையில், நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக நிச்சயமாக குரல் எழுப்பும். தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும், அப்பொழுது தண்ணீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்படும்.
தனியார் பள்ளிகளில் மும்மொழி நடத்தப்படுவதற்கு திமுக பொறுப்பல்ல. திமுக சார்பில் பள்ளி நடத்தப்பட்டால் நிச்சயமாக இருமொழிக்கொள்கை ஆகத்தான் இருக்கும். அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூறி இருப்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.