சதம் அடித்த மகிழ்ச்சியில் அம்பயரை தள்ளிவிட்ட இங்கிலாந்து வீரர் வைரலாகும் புகைப்படம்
நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து , பங்களாதேஷ் அணி மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் இங்கிலாந்து களமிறங்கியது.
இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணி106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ஜேசன் ராய் 92 பந்துகளில் சதம் அடித்தார். ஜேசன் ராய் 27 ஓவரில் 96 ரன்கள் எடுத்தபோது முஷ்பிஸூர் ரஹ்மான் வீசிய பந்தை ஜேசன் ராய் அடித்தார். அவர் அடித்த பந்து எதிர்பாராத விதமாக பீல்டர் தவறவிட்டதால் பவுண்டரியை பந்து தொட்டது.
ஜேசன் ராய் தான் அடித்த பந்தை பார்த்த கொண்ட ஓடினார். அப்போது எதிரே இருந்த அம்பயரை கவனிக்கவில்லை.ராய் வருவதைப் பார்த்து ஒதுங்க முயற்சித்தார் நடுவர் ஆனால் வந்த வேகத்தில் அம்பயர் மீது ஜேசன் ராய் மோதினர்.
அதனால் அம்பயர் கிழே விழுந்தார்.பிறகு ஜேசன் ராய் நடுவரை தூக்கி விட்டார். நடுவர் விழுந்ததால் மைதானமே சிரிப்பு மழையில் மூழ்கியது.