தலைவர் பதவியில் இருந்து விலகினால் இதை கண்டிப்பாக செய்யுங்கள் ராகுல் ! காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்திய மூத்த தலைவரின் கருத்து
மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.ஆனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியானது.ஆனால் அவர் விலகவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லி கூறிய கருத்து ஓன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிய நிலையில் ,தற்போது வரை அவர் தான் தலைவராக இருந்து வருகிறார்.எனவே ராகுல் தலைவர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் கட்சியை மறுசீரமைப்பு செய்து விட்டு செல்ல வேண்டும்.மேலும் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.இவரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.