பணத்திற்க்காக அணியை மறந்த டி வில்லியர்ஸ் – அக்தர் அதிரடி
உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலக்கோப்பை தொடரில் பரிதாபமான நிலையில் உள்ள அணி என்றால் அது தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் மீண்டும் உலக்கோப்பைக்கு விளையாட வருவதாக விருப்பம் தெரிவித்தார் என தகவல் வெளியானது. ஆனால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மறுத்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் டி வில்லியர்ஸை பற்றி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில் பேசிய அக்தர் ஐபிஎல் மற்றும் பி.எஸ் .எல் தொடர்களில் இருந்து விலகி உலக்கோப்பைக்கு தயாராகுமாறு கூறினார். ஆனால் டி வில்லியர்ஸ் அதை செய்யாமல் சர்வேதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
டி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தபோது தென்னாப்பிரிக்கா அணி மிக மோசமான நிலையில் இருந்தது. அணியை அதை பொருட்படுத்தாமல் தனது ஓய்வை அறிவித்தார்.தற்போது மீண்டும் அவர் உலக்கோப்பைக்கு விளையாட வருவதாக கூறியது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தனக்கு இந்தியாவில் ஐசிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது ஆனால் நான் பணத்தை தேர்வு செய்யாமல் நாட்டை தேர்வு செய்தேன்.அதேபோல டி வில்லியர்ஸ் நாட்டுக்காக விளையாடி இருந்தால் நடப்பு உலகோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி இவ்வளவு மோசமான நிலைமைக்கு வந்து இருக்காது என கூறினார்.