உலகக் கோப்பையிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான் தோனி !
உலகக்கோப்பை போட்டி கடந்த மாதம் 30 -ம் தேதி இங்கிலாந்து Vs தென் ஆப்ரிக்கா அணிகள் மோதி உலக்கோப்பையின் முதல் போட்டியை தொடக்கி வைத்தனர். அன்று முதல் இன்று வரை உலக்கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நடப்பு உலககோப்பையில் பரிதாபமான நிலையில் உள்ள அணிகளில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அடங்கும் காரணம் இரு அணிகளும் விளையாடிய அனைத்து போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து உள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக முகம்மது ஷஹ்சாத் காயம் காரணமாக உலக்கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் காயம் அடைந்தார்.ஆனால் காயத்தையும் பொருட்படுத்தாமல் இரண்டு போட்டிகளில் விளையாடினர் தற்போது காயம் அதிகமாகி விட்டதால் உலக்கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
முகம்மது பதிலாக ஆப்கானிஸ்தான் மாற்று வீரரை அறிவித்து உள்ளது.அவர் இக்ரம் அலி முகம்மது பதிலாக விளையாட உள்ளார். இக்ரம் அலி இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முகம்மது இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார்.55 போட்டிகளில் விளையாடி 1843 ரன்கள் குவித்து உள்ளார்.உலக்கோப்பை தொடரில் முகம்மது விலகியது ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.
காரணம் இந்திய அணியின் தோனி போல இவரும் கீப்பிங் மிக சிறப்பாக செய்வார் . மேலும் தோனியை போல பேட்டிங்கில் வெளுத்து வாங்குவர் அதனால் தான் இவரை ஆப்கானிஸ்தான் தோனி என அழைக்கின்றனர்.