மழையால் இன்றைய போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !
இன்றைய போட்டியானது பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,இலங்கை அணியும் மோத இருந்த நிலையில் இந்த போட்டி சரியாக இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடக்க இருந்தது.
போட்டியில் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் டாஸ் போடாமல் இருந்த நிலையில் மழை தொடர்ந்து கொண்டு இருப்பதால் இன்றைய போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.