வசதிக்காக மட்டுமல்ல, உரிமைக்காக கேட்கிறோம் : நடிகர் சதிஷ்
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திக்கேயனுடன் நடித்து வெளியான எதிர்நீச்சல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும், srilanka airways-ல் கூட தமிழில் அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்குள் இயங்கும் எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதில்லை. வசதிக்காக மட்டுமல்ல, உரிமைக்காக கேட்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் #SrilankanAirways ல் கூட தமிழில் அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டிற்குள் இயங்கும் எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதில்லை. வசதிக்காக மட்டும் அல்ல உரிமைக்காகவும் கேட்கிறோம் #வேண்டும்தமிழ் #வேண்டிக்கேட்கும்தமிழர்கள்
— Sathish (@actorsathish) June 6, 2019