BANvNZ : கௌரவமான ஸ்கோரை அடித்த வங்கதேசம் !245 ரன்கள் அடித்தால் நியூசிலாந்து அணி வெற்றி

Default Image

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து  Vs வங்கதேசம் அணி மோதி வருகின்றது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.இதன் படி வங்கதேச அணி தனது  பேட்டிங்கை தொடங்கியது.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு மட்டுமே தாக்குபிடித்தனர்.பின்னர் இக்பால் 24 மற்றும் சவுமியா 25 ரன்களில் வெளியேறினார்கள்.வங்க தேச அணியில் சாகிப் மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.பின் 64 ரன்களில் வெளியேறினார்.இதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சரியாக ஆடத் தவறினார்கள்.ரஹீம் 19,மகமதுல்லா 19,மிதுன் 26,ஹொசைன் 11,ஹாசன் 7,மோர்டசா 1,முகமது 29 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இறுதியாக வங்கதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் அடித்தது.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஹென்றி 4 விக்கெட்டுகள்,போல்ட்  2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.இதன் பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்