வருகிறது 550 ரூபாய்க்கு நாணயம்..!உறுதிபடுத்திய மத்திய அரசு.!
இந்தியாவில் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.புழக்கத்தில் தற்போது 1,2,5,10 ரூபாய் நாணயங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் விரைவில் 550 ரூபாய் நாணயம் வெளியாக உள்ளது. என்று தெரிவித்ததோடு இந்த நாணயம் சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக் பிறந்து 550 ஆண்டுகள் ஆகியுள்ளது.
அவரை சிறப்பிக்கும் விதமாக இந்த 550 ரூபாய் நாணயம் வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குருநானக் ஜெயந்தி வரும் நவம்பர் 12 தேதி கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.அன்று இந்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.