தமிழக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த முறை உயர்ந்திருக்கிறது-தமிழிசை
தமிழக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த முறை உயர்ந்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த முறை உயர்ந்திருக்கிறது. நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தமிழக அரசியல் கட்சிகளின் நீட் எதிர்ப்பு பிரச்சாரம் மாணவர்களாலேயே முறியடிக்கப்படும்.நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அடுத்த முறை அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.