மூன்றாவது போட்டியில் திணறி 228 ரன்கள் இலக்காக வைத்த தென் ஆப்ரிக்கா!
இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகிறது. இப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர்களான குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடினர்.பின்னர் ஹாஷிம் அம்லா 6 ரன்னில் நான்காவது ஓவரில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.
பின்னர் ஆறாவது ஓவரில் குவின்டன் டி காக் 10 ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.பிறகு களத்தில் நிதானமாக விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டூ பிளெசிஸ் , ரேசி வான் டெர் டஸன் அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினார்.
ஆனால் இவர்களின் கூட்டணியை சஹால் 20-வது ஓவரில் டூ பிளெசிஸ் 38 ரன்னிலும் , டெர் டஸன் 22 ரன்னிலும் வீழ்த்தினார். தென்ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்தார்.இறுதியாக தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் சஹால் 4 விக்கெட்டையும், பும்ரா,புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.228 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.