பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் முயற்சி செய்ய வேண்டும் -தமிமுன் அன்சாரி
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் முயற்சி செய்ய வேண்டும் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழக சிறைகளில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள கைதிகளை மனிதாபமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் .பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.