இரண்டாவது போட்டியில் வெல்ல போவது நியூசிலாந்தா?வங்காளதேசமா ?
இன்று நியூசிலாந்து Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் நடைபெறும்.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை மொத்த 29 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து அணி 24 போட்டிகளில், வங்காளதேசம் 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.
மேலும் இதுவரை இரு அணிகளும் இதுவரை மொத்த 7 டி20 போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. வங்காள தேசம் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த இரு அணிகளும் நியூசிலாந்து அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. வங்காள தேசம் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மூன்று போட்டிகள் டிரா ஆனது.
நடப்பு உலக்கோப்பையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று உள்ளது.இன்று மோதும் இந்த இரு அணிகளுக்கும் நடப்பு உலகக்கோப்பையில் இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.