கொண்டாட்டத்தில் நயன்தாரா ரசிகர்கள்-காரணம் இதுதானா…??
அறம் என்ற படத்தின் மூலம் மக்களின் மனதில் இன்னும் அதிகமான இடத்தை பிடித்தவர் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நேற்று வெளியாகி இருக்கும் வேலைக்காரன் படத்திலும் நயன்தாரா கலக்கியுள்ளார். அண்மை காலமாக நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மக்கள் மனதில் பதியும் விதமாக உள்ளது. இந்நிலையில், சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்து வரும் டிசம்பர் 25ம் தேதியோடு 14 வருடம் முடிகிறது. இதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் இப்போதே இணையத்தில் #14YearsofNayanthara போன்ற டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.