15 ரன்னில் 4 விக்கெட்டை இழந்த இலங்கை அணி!
நேற்றைய போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் மோதியது.இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி தங்களது மூன்றாவது விக்கெட் முதல் ஆறாவது விக்கெட்டை வரை வெறும் 15 ரன்களை எடுத்து இழந்தது.இதற்கு முன் கடந்த ஜூன் 1-ம் தேதி விளையாடிய இலங்கை அணி நியூசிலாந்திடம் 14 ரன்னில் இதேபோல் விக்கெட்டை இழந்தது.
இந்த நான்கு விக்கெட்டில் மூன்று விக்கெட்டை முகம்மது நபி ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
6 – CAN v SL, 2003
7 – PAK v ENG, 1999
11 – SCO v WI, 1999
14 – SL v NZ, 2019
15 – AUS v ENG, 1975
15 – NED v IND, 2003
15 – SL v AFG, 2019