பாரதியார் தலைப்பாகையில் நிறம் மாறியது ஏன்? தலைவர்கள் கேள்வி!
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இவர்களுக்கான புதிய பாட நூல்களை நேற்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
அதில், பொதுத்தமிழ் பாடநூலில் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியார் அவர்களது புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுவரை முண்டாசு வேந்தன் பாரதி வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்த நிலையில் புதிய பாடநூலில் காவி நிறத்தில் உள்ளது.இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், காவி நிறத்தை தமிழகத்தினுள் நுழைக்க முயற்சியை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து,தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் கூறுகையில் முகப்பு அட்டையில் தேசியக்கொடியின் வண்ணமாய் எண்ணியே வைத்தோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.