உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கிரண்பேடியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது. நிதி தொடர்பான முடிவுகளை அமல்படுத்த மட்டுமே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.