ஒரே போட்டி மூலம் நான்கு சாதனை படைத்த பங்களாதேஷ் அணி!
நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் அணி மோதியது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 309 ரன் எடுத்து 21 ரன்னில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். உலக கோப்பையில் இந்த இலக்கை இது வரைக்கும் யாரும் அடித்தது இல்லை. இந்த ரன்கள் தான் உலக கோப்பையில் ஓவல் மைதானத்தில் அடித்த அதிகபட்ச ரன்களில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது.
மேலும் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இது தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும்.