உலக்கோப்பை தொடரில் முதல் இடத்தில் உள்ள அயர்லாந்து அணி!

Default Image

உலக கோப்பை தொடர் இதுவரை 11 முறை நடந்து உள்ளது.இந்த வருடம் 12 முறையாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் ஒவ்வொரு போட்டிகள் முடிவில் கண்டிப்பாக ஒரு அணி பல சாதனைகளை புரியும் அப்படி 2011-ம் ஆண்டு அயர்லாந்து அணியும் ஒரு சாதனையை புரிந்து உள்ளது.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை 15-வது போட்டியில் இங்கிலாந்து , அயர்லாந்து அணி மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது.
இதன் பின் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 327 ரன்கள் குவித்தது.
பின்னர் 328 என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அதன் மூலம் முதல் முறையாக உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் கொண்ட இலக்கை எட்டி பிடித்து வெற்றி பெற்ற பெருமையை அயர்லாந்து அணி பெற்றது.
மேலும் இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடரில் அதிக இலக்கை கொண்ட ரன்களை எட்டி பிடித்து வெற்றி பெற்று அயர்லாந்து அணி முதல் இடத்தில் உள்ளது.
328 – IRE v ENG, 2011
319 – BAN v SCO, 2015
313 – SL v ZIM, 2015
310 – SL v ENG, 2015
307 – IRE v NED, 2011

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்