தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பு !இந்தி கட்டாயம் என்ற கல்விக் கொள்கை நீக்கியது மத்திய அரசு
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது.
இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது
இந்நிலையில் தமிழகத்தில் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் செய்துள்ளது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் .மேலும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.