டெல்லியில் பார்வையற்ற மாணவர்களை கடும் குளிரில் தெருவில் விட்டுள்ள கொடுமை.! ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கண்டனம்.!!

Default Image

தலைநகர் டெல்லியின் ஜனக்புரி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பார்வையற்ற மாணவர்களுக்காக இலவச இல்லம் ஒன்று இயங்கி வந்தது. அந்த இல்லத்தை, டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சமீபத்தில் இடித்தனர். இதன் காரணமாக, அந்த இல்லத்தில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம், பீகார், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பார்வையற்ற மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது அவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற பொதுவெளியில் தங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர்களுடைய பிரெயில் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை தொலைக்க நேரிட்டுள்ளது. தற்போது டெல்லியில் நிலவும் கடும் குளிரில் அவர்கள் பல்வேறு சிரமங்கள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.

 

 

டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இந்த செயலை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கண்டித்துள்ளது. பார்வையற்றவர்களின் சிரமங்களை சிறிதும் கவனத்தில் கொள்ளாமல், பொறுப்பற்ற செயல் இது என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

உடனடியாக அவர்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க டெல்லி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வலியுறுத்தியுள்ளதோடு, தனது குழு ஒன்றையும் நேரில் அனுப்பி, தனது ஆதரவையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

03012025 LIVE
Coimbatore LPG Accident
Rasakulla (1)
Chengalpattu Collector Arunraj IAS speech about One person fire himself
Minister MRK Pannerselvam scold his assistant in Tanjore meeting
IND vs AUS 5th test Day 1
DMK MP Kathir Anand - DMK Minister Duraimurugan