உலககோப்பை போட்டியில் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான்
உலகக்கோப்பை நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் அணி மோதியது. முதலில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 207 ரன்கள் எடுத்தது.
போட்டியில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் புதிய சாதனை படைத்தார். ஆஸ்திரேலியா எதிரான உலக கோப்பை போட்டியில் அதிக ஸ்ட்ரிக் ரேட் அடித்த வீரர்களில் ரஷீத் கானும் ஒருவர்.இவர் 11 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.அதில் பவுண்டரி 2 , சிக்ஸர் 3 அடங்கும்.
258 – மொயின் கான் 31 * (12), லீட்ஸ், 1999
245 – ரஷீத் கான் 27 (11), பிரிஸ்டல், 2019
217 – டி சண்டிலிம் 52 * (24), சிட்னி, 2015
இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.