நியூஸிலாந்து அதிரடி பந்து வீச்சில் 136 ரன்னில் மூட்டை கட்டிய இலங்கை!
உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும்மோதி வருகிறது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடங்க வீரர்களாக கருணாரட்னே, திரிமன்னே ஆகிய இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் திரிமன்னே 4 ரன்னில் வெளியேறினார்.பின்னர் குசால் பெரேரா களமிறங்கினர்.கருணாரட்னே , குசால் பெரேரா இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.இவர்களின் கூட்டணியை நியூஸிலாந்து அணி சில ஓவரில் தகர்த்தது.
அதனால் குசால் பெரேரா 29 ரன்னில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய அடுத்தடுத்த வீரர்கள்
வீரர்கள் | ரன்கள் | பந்து | பவுண்டரி | சிக்ஸர் |
குசன்ஸ் மெண்டிஸ் | 0 | 1 | 0 | 0 |
தனஞ்சய டி சில்வா | 4 | 13 | 1 | 0 |
ஏஞ்சலோ மேத்யூஸ் | 0 | 9 | 0 | 0 |
ஜீவன் மெண்டிஸ் | 1 | 4 | 0 | 0 |
திசார பெரேரா | 27 | 23 | 0 | 2 |
இசரு | 0 | 3 | 0 | 0 |
சுரங்க லக்மால் | 7 | 13 | 1 | 0 |
லசித் மலிங்கா | 1 | 2 | 0 | 0 |
இறுதியாக இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர்.நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார்.நியூஸிலாந்து அணி 137 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளனர்.