கோலாகலமாக தொடங்கிய திருநள்ளாறு பிரம்மோற்சவம்..!
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இங்கு சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு தனி சன்னதி உள்ளது.ஆண்டு தோறும் இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் அதன்படி இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்வான ஜுன் 5 தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறும் அதனை தொடர்ந்து ஜுன் 12 தேதி காலை தேரோட்டம் மற்றும் ஜுன் 14 தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது..