உலகக்கோப்பையில் மீண்டும் சச்சின்..!
உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட்டின் சகாப்தம் என்றால் ஒருவரியில் சொல்லி விடுவார்கள் சச்சின் என்று இவருடைய ஆட்டத்தை பார்க்கவே கிரிக்கெட் உலகில் தனி ரசிகர் படை உண்டு கிரிக்கெட்டையும் சச்சினையும் பிரித்தே பார்க்க முடியாது.
கிரிக்கெட்டோடு வாழ்ந்த சகாப்தம் விருதுகளே வியக்கும் வண்ணம் தனது விடா முயற்சியால் கடின உழைப்பால் விருதுகளை தன் முன் மண்டியிட வைத்தவர்.ஊர் பகுதியில் பள்ளி சிறுவர்கள் மட்டையை பிடித்து ஆடுவதற்கு ஆர்வம் அளித்ததே சச்சின் ஆட்டம் தான் என்று பெரும்பாலானோரும் இன்று கூறுவார்கள்.
வீட்டில் கிரிக்கெட் விளையாண்டால் உடனே இவர் பெரிய சச்சின்னு என்று கூறும் அளவிற்கு அனைவரித்திலும் அத்துணை பரிட்சயம்.அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் இன்றாளவும் ஏன் எப்பொழுதும் அவருக்கென்று ஒரு இடமுண்டு.கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்க்ப்பட்டவர் சச்சின்.
இப்படி தனது வாழ்க்கையை கிரிக்கெட் அத்தியாத்தில் தொடங்கிய அவர் தற்போது மீண்டும் புது அவதாரத்துடன் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.ஆம் அதுவும் உலககோப்பை போட்டியில் தான்.இந்தாண்டு நடைபெறும் உலககோப்பை போட்டியில் வர்ணனையாளராக களமிறங்கி உள்ளார்.அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காண முடியவில்லை என்ற குறை ரசிகர் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது அது நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.