விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ6 ஆயிரம் வழங்கும் திட்டம் 14.5 கோடி குடும்பங்களுக்கு விரிவாக்கம்-மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ6 ஆயிரம் வழங்கும் திட்டம் 14.5 கோடி குடும்பங்களுக்கு விரிவாக்கம் செய்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூ87,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது . ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.