திமுக-வின் அமோக வெற்றி! சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்த அதிமுக!
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஆண்டிபட்டி தொகுதியில், திமுக வெற்றி பெற்றதால், 20 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த சட்டமன்ற அலுவலகத்தை அதிமுக-வினர் காலி செய்தனர்.
ஆண்டிபட்டி தொகுதியை கடந்த 2001-ம் ஆண்டு முதல் அதிமுக தொடர்ந்து தக்கவைத்திருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் ஆண்டிபட்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட மகாராஜன் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அதிமுக – வினர் சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்ததோடு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களையும் எடுத்து சென்றுள்ளனர்.