விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அம்லா ..!என்ன சாதனை தெரியுமா ?
இன்று 50 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள ஹாசிம் அம்லா ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறார்.அது என்னவென்றால் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை தாண்டி சாதனை படைக்க உள்ளார்.இதுவரை 172 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் 7910 ரன்கள் அடித்துள்ளார்.90 ரன்கள் இன்றைய போட்டியில் அடிக்கும் பட்சத்தில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் கோலி,175 இன்னிங்சில் 8000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார்.தற்போது அம்லா இன்றைய போட்டியில் 90 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவர் கோலியின் சாதனை முறியடிப்பார்.