உலக அளவில் ட்ரெண்டாகும் #PrayForNesamani !ட்ரெண்டாக காரணம் இது தானா …
தமிழர்களை பொருத்தவரை ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்குவதில் வல்லமை படைத்தவர்கள் ஆவார்கள்.அந்த வகையில் தமிழக மக்கள் உச்சத்தில் உள்ளவர்கள் முதல் சாதாரனமானவர்கள் வரை அனைவரையும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். சமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.
அந்த வகையில் தற்போது ட்விட்டரில் நேட்டீசன்கள் #PrayForNesamani என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இதற்கு காரணம் @civilenglearners என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியல் படம் ஒன்றை பதிவிட்டு இந்த கருவிக்கு உங்கள் நாட்டில் என்ன பெயர் என்று பதிவிட்டிருந்தது.இதற்கு Vignesh Prabakar என்பவர் கமெண்டில் This is what we call Suthiyal. It will give “tung tung” sound when we blow with it on something. Painting contractor Nesamani’s head was broken in jamin palace with this one by his nephew. Paavam என்று பதிவிட்டார்.மேலும் மற்றொரு கமெண்டில் #pray_for_nesamani என்று பதிவிட்டார்.
இந்த பதிவு அவர் பதிவிட்ட முதலே வைரலாக தொடங்கியது.அப்படியே முகநூலில் இருந்து ட்விட்டர் பக்கம் வந்தது.ட்விட்டருக்கு வந்தவுடன் அது மீண்டும் வைரலாகி இந்தியா மற்றும் சென்னை ட்ரெண்டிங்கில் முதல் இடத்திலும் மற்றும் உலக அளவில் 6-வது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.