வட்டியில்லா வங்கியை துவங்குகிறது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…!
அரசு மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் சார்பில் வட்டியில்லா வங்கி தொடங்க மோடி அரசு தடை விதித்துள்ள நிலையில்,கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கப்படும் சேவை..
இஸ்லாமிய அமைப்புகள் இந்தியாவில் வட்டியில்லா வங்கி துவங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துவிட்ட நிலையில்,கேரளாவில் CPI (M )கட்சி ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறது.
அதன் அடிப்படையில் அக்கட்சியின் ஏற்பாட்டில் கண்ணூரில் “ஹலால் ஃபாயிதா” என்ற பெயரில் வட்டியில்லா கூட்டுறவு வங்கி திறக்கப்படுகிறது.இந்த வங்கியை வரும் 24 ஆம் தேதி அதாவது நாளை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கிவைக்கிறார்.