இந்திய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி, கமல் பெயர் இல்லை?
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை இந்திய பிரபலங்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடவுவது வழக்கம். வருமானம் மற்றும் புகழின் அடிப்படையில் இந்த பட்டியல் எடுக்கப்படும். இந்நிலையில் இந்த வருட 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி,கமல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், அவர்களது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், இது குறித்து ஆராய்ந்த பொழுது, போா்ப்ஸ் பத்திாிகை இந்த ஆண்டு வருமானம் மற்றும் வயதின் அடிப்படையில் பட்டியலை நிர்ணயித்துள்ளதாலும், 2017 படங்கள் வெளியீட்டின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளதாலும் 100 பிரபலங்களின் பட்டியலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், இதில், சல்மான் கான், ஷாரூக் கான், விராட் கோலி, அக்க்ஷ்ய் குமார், சச்சின் ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர். பிரியங்கா சோப்ரா 7வது இடத்திலும், மகேந்திர சிங் தோனி 8வது இடத்திலும், தீபிகா படுகோனே 11-வது இடத்திலும் உள்ளாா். 12-வது இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், 25-வது இடத்தில் சூர்யா, 27-வது இடத்தில் அஜித் குமார் இடம்பெற்றுள்ளனர். விஜய்க்கு 31-வது இடமும், ஜெயம் ரவிக்கு 39-வது இடமும், விஜய் சேதுபதிக்கு 54-வது இடமும், தனுஷுக்கு 70-வது இடமும் கிடைத்துள்ளது.
source: dinasuvadu.com