இந்தியாவுக்கு எப்பவுமே இவருதான் கேப்டன்.!கெத்து காட்டும் சுரேஷ் ரெய்னா

Default Image

இந்திய அணிக்கு எப்பொழுதும் தோனி தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டி நாளை மறுதினம் கோலாகலமாக இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.  இதில் விளையாட இந்திய அணி மட்டுமல்லாமல் 9 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளது.

இந்நிலையில் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் இந்தியாவின் பெயரும் வலுவாக உள்ளது.மேலும் ரசிகர் மத்தியில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related image

ஆனால் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.மேலும் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.இதற்கு ரசிகர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தது.இந்திய அணி தொடர்பாக பல்வேறு  கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னாள் இந்நாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு தற்போது இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா தோனியின்  தலைமை குறித்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ;

வீரர்கள்  பட்டியல் அடங்கிய பேப்பரில் தோனி பெயர் கேப்டனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் மைதானத்தில் அவர் தான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்இந்திய அணியின் கேப்டன் கோலியாக இருந்தாலும் கீப்பிங் செய்து கொண்டு ஆட்டத்தை கணிப்பவர் மட்டுமல்லாமல் பவுலர்களுக்கு ஆலோசணை வழங்குவார்.அவர் கேப்டன் பதவியில்  இல்லை என்றாலும்  கோலியின் வேலையை கீப்பிங் செய்து கொண்டு அந்த வேலையும் சேர்த்து பார்ப்பார்.

Image result for suresh raina DHONI

அவர் கேப்டனுகளுக்கு எல்லாம் கேப்டன் தோனி ஸ்டெம்பீங் பின் நின்று கொண்டு ஆடுவதை தனக்கு சாதகமாக தான் உள்ளது என்று  கோலியும் ஏற்று கொள்கிறார் இதை அவரே ஒப்பு கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தோனியின்  மீது  கிரிக்கெட் வட்டாரங்கள் விமர்சனங்களை கொட்டி வரும் இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னாவின் தன்னபிக்கையான பேச்சு தோனியின் ஆட்டத்தை  விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்