விடைத்தாள் முறைக்கேடு விவகாரம் : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் சமீபகாலமாக பல்வேறு சர்சையில் சிக்கி வருகிறது.சமீபத்தில் விடைத்தாள் முறைக்கேட்டில் சிக்கியது பெரும் ஏற்படுத்தியது.இதனால் அண்ணா பல்கலைக்கழகங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.