மோடி எனும் தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி! – ரஜினிகாந்த் பேட்டி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட சில கேள்விகளும் அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிட்ட பதில்களும்,
பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு ரஜினிகாந்த் மோடி எனும் தனி மனிதத் தலைமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும், ராகுல் பதவி விலகுவது குறித்த முடிவிற்கு, அது தவறான முடிவு அவர் தலைமையுற்று நிரூபித்து காட்ட வேண்டும். என கூறினார்.
திமுக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரபோவதில் திமுக உறுதியாக உள்ளதா என கேட்டதற்கு அதற்கு ரஜினி ஷ்டைலில் wait and see (பொறுத்திருந்து பார்ப்போம்) என கூறினார்.
மேலும் தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை உள்ளது. அதனால் தான் பாஜக தமிழ்நாட்டில் தோற்றது என குறிப்பிட்டார்.
DINASUVADU