ராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல் காந்தி! அடுத்ததாக நடக்க போவது என்ன?
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை, தோல்விக்கான காரணத்தை ஆராய்வதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தோல்வியை பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், இதனை, காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ராகுல் காந்தி அவர்கள் தனது ராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருப்பதால், மிக விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடலாம் எனவும், சோனியா காந்தியை மீண்டும் தலைவராக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.