சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு “Wait And See”என பதிலடி கொடுத்த ஸ்டாலின்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் 13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்றபின் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில்,சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் திமுக உறுதியாக உள்ளதா என கேள்விகள் கேட்கப்பட்டது அதற்க்கு பதில் அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “Wait And See” என பதில் அளித்தார்.
மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது சட்டமன்றம் கூடும்போது தெரியும் எனவும் கூறினார்.