3 நாள்களில் 2 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்-தமிழக அரசு கோரிக்கை
டெல்லி காவிரி மேலாண்மை ஆணை கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டம் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடை பெறுகிறது.இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் மே மாதம் முடிவதற்குள் காவிரியில் 2 டிஎம்சி நீரை உடனடியாக கர்நாடகா வழங்க உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணை கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.மேலும் குறுவை சாகுபடிக்கு கர்நாடகம் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளது.