2 வது பயிற்சி ஆட்டத்தில் இன்று வங்காளத்தோடு மோதும் இந்தியா.!ஆட்டத்தை வெளிபடுத்துமா..?எதிர்ப்பார்பில் ரசிகர்கள்
2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது.
இந்நிலையில் இன்று இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் வங்களா தேசத்தை எதிர்கொள்கிறது. கோலி தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.அதே போல் மோர்தசா தலைமையில் வங்காள தேசம் விளையாட உள்ளது.இந்திய இந்த போட்டியிலாவது தனது ஆட்டத்தை வெளிபடுத்தி நம்பிக்கை தர வேண்டும் என்பது ரசிகர்களின் எத்ர்பார்ப்பாக உள்ளது.
மற்றுமொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.