வரதட்சணை வாங்க மறுத்த மாப்பிள்ளை வீட்டார்! வரதட்சணைக்கு பதிலாக வரதட்சணைக்கு மேலான விலையுயர்ந்த பொருளை பரிசாக அளித்த பெண் வீட்டார்!
இன்று வரதட்சணை இல்லாத கல்யாணத்தை பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில், பள்ளி ஆசிரியர் சூரியகாந்தா பாரிக் என்பவருக்கும், பிரியங்கா பேஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாப்பிள்ளை தொடக்கத்திலேயே வரதட்சணை வேண்டாம் என்று உறுதியாக சொல்லியிருந்தார். இந்நிலையில் பெண் வீட்டார் அவர்களது திருமணத்தன்று சர்ப்ரைஸாக அவருக்கு 1 லட்சம் மதிப்புள்ள 1000 புத்தகங்களை பரிசாக அளித்துள்ளனர்.
இதுகுறித்து, பிரியங்கா அவர்கள் கூறுகையில், எனது பெற்றோருக்கு வரதட்சணை கொடுப்பதில் உடன்பாடு இல்லை. சூரியகாந்தாவுக்கும் அது பிடிக்காது. அவரது குணத்தை பாராட்டி, அவருக்கும் புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடுள்ளதால் இந்த பரிசை அளித்ததாகவும், எனக்கும் புத்தகம் வாசிப்பதில் உடன்பாடு இருப்பதால், எனது தந்தை இப்படி முடிவை எடுத்துள்ளார்.’என்று தெரிவித்துள்ளார்.