வில்லனாக களமிறங்கும் பிரசன்னா!
நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பைனான்ஸ் பிரச்சனையால் வெளியாவதில் இக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நாடகமேடை என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில், இந்த படம் பாதியில் நிற்கிறது.
இதனையடுத்து இவரது அடுத்த புதிய படம், குற்றப் பின்னணியில் திரில்லர் கதையாக உருவாகவுள்ள நிலையில், இப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், நடிகர் பிரசன்னா இப்படத்தில் வில்லனாக நடிகைவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.