ஆண்மையில்லையா என கேட்ட இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு !
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “96”. இந்த படத்தில் நடிகை திரிஷா இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா கடுமையாக விமர்சித்தார்.
இது பற்றி இளையராஜாவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கபட்டது. “இது முற்றிலும் தவறு.படத்தின் பிளாஸ் பேக்கில் அந்த காலத்தில் நான் இசையமைத்த பாடல்களை ஏன் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.இப்போது இருக்கும் இசைமைப்பாளர் அந்த காலத்தில் கட்டத்திற்கு ஏற்றவாறு ஒரு பாடலை இசையமைக்க முடியாதா என்று கூறியுள்ளார்.இது ஆண்மை இல்லாத தனம் போல் இருக்கிறது ” என்று கடுமையாக பேசினார்.தற்போது அதற்கு “96” படக்குழு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் 96 பாடல்களுக்கு ராயல்டி கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளது.
https://twitter.com/dreamboatme/status/1132856153002483712