சைனஸ் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? இதனை தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்!
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்களால் என் வேலையும் செய்ய இயலாது. தலைவலி மிகவும் அதிகமாக காணப்படும்.
தற்போது இந்த பிரச்சனையில் உள்ளவர்கள் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
ஏசியை தவிர்க்க வேண்டும்
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை ஏசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி பயன்படுத்தினால் ஏசியை வாரம் ஒருமுறை சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மிக எளிதாக சைனஸ் பிரச்னை ஏற்படும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கோலா வேண்டும்.
தூசுள்ள இடங்களில் வேலை செய்வதை தவிர்த்தல்
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், அதிகமாக தூசுக்கள் காணப்படுகிற இடங்களில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
உடையில் சுத்தம்
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், ஆடையை பயன்படுத்தும் போது சுத்தமாக பயன்படுத்த வேண்டும். முக்கியமாக நாம் எப்போதும் கையில் வைத்திருக்கிற கைக்குட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்த்தல்
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தாய் விட்டுவிட வேண்டும். இப்பழக்கம் நோயின் தாக்கத்தை மேலும் அதிகரிக்க சேயும்.
கை சுத்தம்
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் வேலைகள் செய்யும் போது, கைகளை தூசியில் வைத்து விட்டு, அப்படியே முகத்தில் தடவினால், தூசுக்கள் நமக்கு மேலும் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே கை சுத்தம் மிகவும் அவசியமான ஒன்று.